மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கிடும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல்!
Apr 16, 2025, 12:06 IST1744785413419

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்வழங்கிடும் சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிமுகம் செய்தார். உள்ளாட்சி அமைப்புகளில் நேரடி பிரதிநிதித்துவம் மூலம் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த சட்டமுன்முடிவை கொண்டு வரும் போது பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்த உள்ளத்தோடு திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. குரலற்றவர்களின் குரலாக திராவிட மாடல் ஆட்சி இருக்கும் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது என கூறினார்.