தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
stalin

நியாயமான தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பேச பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. 


இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பேச பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடி அவர்களே, தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மனுவை, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவுடன் இணைந்து உங்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். மக்களின் இந்த முக்கிய பிரச்னை தொடர்பாக எங்களது ஒற்றுமையான கருத்துகளை எடுத்துரைக்க விரைவில் நேரம் ஒதுக்குக என குறிப்பிட்டுள்ளார்.