ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
evks

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். இவர் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்காக இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான பாதிப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் இது தொடர்பாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நுறையீரலில் உள்ள சளி காரணமாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். மருத்துவமனைக்கு நேரில் சென்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் தமிழக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.