தாயாரின் நலம் குறித்து விசாரிக்க முதல்வர் மருத்துவமனை வருகை

 
stalin

தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு திடீர் முச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தயாளு அம்மாளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தயாளு அம்மாளின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக தயாளு அம்மாள் நேற்றிரவு சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவாரூர் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், நேற்றிரவு நேரடியாக மருத்துவமனை சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.