மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

 
stalin

மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழக் சட்டப்பேராவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  திமுக, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை தந்தனர். வக்பு சட்டத்திருத்த தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நம்பிக்கையை பெற்றவர் மூக்கையா தேவர். மக்கள் நாயகனாக திகழ்ந்தவர். மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும்.தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கார்ல் மார்க்ஸ்-க்கு சிலை நிறுவப்படும் என கூறினார்.