நீட் தேர்வு விவகாரம் - வரும் 9 ஆம் தேதி அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்

 
stalin stalin

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வரும் 9 ஆம் தேதி அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பாக கூறியதாவது: மருத்துவத் துறையில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாகிவிட்டது. நீட் தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது. 

சட்ட வல்லுனர்களுடன், சட்ட நடவடிக்கைகள் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வு தொடர்பாக வரும் 9ம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். தமிழக சட்டப்பேரவையின் தீர்மானங்களை ஒன்றிய அரசு கருத்தில் கொள்வதில்லை என கூறினார்.