"நீண்ட வருடங்களுக்கு பின் ஒன்றாக புகைப்படம்" எடுத்து கொண்ட சகோதரர்கள்!!

 
tn

வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்தார்.

cm stalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும்,  முன்னாள் மத்திய அமைச்சருமான மூக்க அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  இதை தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் அவரை முதலமைச்சரும் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்தார். 

mks

இந்த சூழலில் துரை தயாநிதி சந்தித்து நலம் விசாரிக்க மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.  துரை தயாநிதி  உடல்நலம்  குறித்து விசாரித்த முதலமைச்சர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். மருத்துவமனையில் துரை தயாநிதி உடன் இருந்த மு.க. அழகிரி உடன் முதல்வர் மு க ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார் . நீண்ட வருடங்களுக்கு பின் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரர் மு.க.அழகிரி எடுத்து கொண்ட இப்புகைப்படம்  இணையதளத்தில் தற்போது வைரலாகி  வருகிறது.