#JUSTIN முதல்வர் கோப்பை ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்யலாம்
Aug 6, 2026, 17:48 IST1786018697238
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது.
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். முதல்வர் கோப்பை விளையாட்டில் கடந்தாண்டு 38 வகை போட்டிகள் நடந்த நிலையில் இம்முறை 45 ஆக அதிகரித்துள்ளது. நிகழாண்டில் வில் வித்தை, வுஷூ, துப்பாக்கிச்சுடுதல், யோகா, மல்லர் கம்பம், கோனோயிங் உள்ளிட்டவை புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 4 முதல் பல்வேறு பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. tncmtrophy.sdat.in உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 31க்குள் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

