அம்மா உணவகங்களில் இன்று இலவசமாக உணவு அருந்தலாம் - முதலமைச்சர் அறிவிப்பு

 
stalin

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று மக்கள் இலவசமாக உணவு அருந்தலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, கிண்டி, அடையாறு, ஆலந்தூர், வேளச்சேரி, தரமணி, திருவானியூர், மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழுந்துள்ளது. சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். 

இந்த நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று மக்கள் இலவசமாக உணவு அருந்தலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கனமழையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று ஒருநாள் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.