சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

 
rajinikanth and cm stalin

தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

stalin
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்த  தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  குறிப்பாக காவல்துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளும் இதில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது . 

stalin

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர் , தலைமைச் செயலாளர் இறையன்பு,  தமிழ்நாடு  டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.  குற்ற சம்பவங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுப்பது,  சட்டம் ஒழுங்கை பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.  சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாத வகையில் பாதுகாப்பு தீவிரப்படுத்துவது குறித்தும்,  இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.