நகைக்காக தூய்மை பணியாளர் கொலை

 
murder

வேதாரண்யம் அருகே நகைக்காக தூய்மை பணியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு வழியன்செட்டி கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் வயது (65). இவரது மகன் ராஜா மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். நாகம்மாள் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அருகில் உள்ள தைல மர தோப்பில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து கரியாப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.

மேலும் வேதாரணயம் டிஎஸ்பி சுபாஷ் சந்திர போஸ், நாகை எஸ்பி அருண் கபிலன் ஆகியோர் நேரில் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மோப்ப நாய் துலிப் சம்பவ இடத்திற்கு வந்து கொலை நடந்த பகுதியில் சிறிது தூரம் ஓடி நின்றது. இது குறித்து காரியாபட்டினம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த நாகம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.