ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர் பலி
Updated: Jan 23, 2024, 18:02 IST1706013158019
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் விஷ வாயுத்தாக்கி ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதி ஹாஸ்பிடல் ரோடு அரவிந்த் அக்ஷயம் அப்பார்ட்மெண்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சுரேஷ் (50), ரமேஷ் ஆகிய இருவரும் அதனுள் இறங்கி உள்ளனர் அப்போது விஷவாயு தாக்கியதில் இருவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு துடிதுடித்துள்ளனர். இந்நிலையில் சுரேஷ் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமேஷை மீட்ட அம்பத்தூர் மற்றும் ஆவடி தீயணைப்பு வீரர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.