சக மாணவனை அரிவாளால் வெட்டிய 9ம் வகுப்பு மாணவன்!

நெல்லை மாவட்டம் விஜய நாராயணம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய 9ம் வகுப்பு மாணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் விஜய நாராயணம் அருகே உள்ளது கேந்திரிய வித்யாலயா பள்ளி. ஒரே வகுப்பில் 9 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களிடையே தண்ணீரை சிந்தியதில் மோதல் ஏற்பட்டது. ஒன்றாக படிக்கும் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பின் வாக்குவாதமாக மாறியது. இதில் ஒரு மாணவர் வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாளை எடுத்துச் சென்று சக மாணவரை வெட்டினார். அரிவாளால் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்ட மாணவருக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
அரிவாளால் தாக்கி விட்டு தப்பியோடிய மற்றொரு மாணவரை போலீசார் தேடிவருவதாக நாங்குநேரி ஏ.எஸ்.பி. டாக்டர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.