சக்கரத்தில் சிக்கிய 3-ம் வகுப்பு மாணவி: பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதையால் சிறுமி ருத்வி பலி!

 
1 1

கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள குருநானக் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமி ருத்வி, வழக்கம்போல் நேற்று பள்ளிப் பேருந்தில் வீட்டிற்குத் திரும்பினாள். அவள் தனது வீட்டின் அருகே பேருந்தில் இருந்து இறங்கியபோது, ஓட்டுநர் சிறுமி இறங்கியதை கவனிக்காமல் பேருந்தை வேகமாக இயக்கினார்.

இதனால் நிலை தடுமாறிய ருத்வி கீழே விழுந்து, பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கினாள். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய சிறுமியை அப்பகுதி மக்களும், பெற்றோரும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி ருத்வி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பீதர் போலீசார், அஜாக்கிரதையாகப் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரைக் கைது செய்தனர்.