இன்று வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்!

 
tn

தமிழ்நாட்டில் 4 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள்,  3 லட்சத்து 58 ஆயிரம் மாணவர்கள் ஒரு திருநங்கை உட்பட ஏழு லட்சத்து 72,000 பேர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை எதிர்கொண்டனர்.  இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வகளும் அடங்குவர்.

school

 கடந்த மாதம் 2ம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்ற நிலையில் தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.

school

மாணவ - மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தேர்வு  முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் அவர்கள் பள்ளிகளில் கொடுத்துள்ள செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.