10ம் வகுப்பு மாணவனால் கர்ப்பமான 11ம் வகுப்பு மாணவி... கழிவறையில் குழந்தை பெற்று புதரில் வீசிச்சென்ற கொடூரம்..

 
10ம் வகுப்பு மாணவனால் கர்ப்பமான 11ம் வகுப்பு  மாணவி... கழிவறையில் குழந்தை பெற்று புதரில் வீசிச்சென்ற கொடூரம்.

கடலூர் அருகே அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவி பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்து , முட்புதரில் வீசிச்சென்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மாணவி

கடலூர் மாவட்டம், புவனகிரியில் செயல்பட்டு  வரும் அரசு பள்ளியில்  500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்தப் பள்ளியின் கழிவறை அருகே வெளிபக்கம் முட்புதரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்துள்ளது.  இதனைப்பார்த்து  அதிர்ச்சி அடைந்த  மாணவிகள்  பள்ளி ஆசிரியர் மற்றும்  தலைமை ஆசிரியருக்கு தெரியப்படுத்துயுள்ளது. பின்னர் தலைமை ஆசிரியர் அளித்த புகாரின்பேரில்,   புவனகிரி காவல்  ஆய்வாளர் சரஸ்வதி, உதவி ஆய்வாளர் சந்தோஷ்  ஆகியோர் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.   அங்கு கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த 10 ஆம் வகுப்பு மாணவி! பேருந்து நிலையத்தில் சுற்றிவளைத்த போலீசார்!

இதுகுறித்து பள்ளி மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டதில்  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதில்  அந்தப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரே கர்ப்பமாக இருந்து குழந்தை பெற்றெடுத்தது தெரியவந்துள்ளது.  வலி ஏற்பட்டத்தும் பள்ளியின் கழிவறைக்குச் சென்ற மாணவி, அங்கேயே குழந்தை பிறந்துள்ளது.  குழந்தை இறந்தே பிறந்ததால் அதனை மாணவி  முட்புதரில் வீசிச்சென்றதும் தெரியவந்தது.  இதில் மேலும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் என்னவென்றால்,  மாணவியின் கர்ப்பத்துக்கு  அதே பள்ளியில் பயின்று வரும்  சென்யின் ஊரை சேர்ந்த 10ம் வகுப்பு  மாணவன்  என்பதுதான்.  பின்னர் சம்பந்தப்பட்ட மாணவியை சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் சக மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.