தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியீடு!

 
exam

தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 08ம் தேதி வெளியாகின. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில்  மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.  இந்த ஆண்டும் வழக்கம்போல  மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி  மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில்  10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 19ஆம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.