10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு

 
school

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது.

school

தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10 11-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது . நடப்பு கல்வி ஆண்டில் பொது தேர்வுகள் 12 ஆம் வகுப்புக்கு மார்ச் 18ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு மார்ச் 19ஆம் தேதியும் ,பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 8ம் தேதியும் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

School Education
இதற்கான தேர்வு அட்டவணை தற்போது தயாராகி வருகிறது.  இந்நிலையில் மக்களவைத் தேர்தல் உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு பொது தேர்வுக்கான கால அட்டவணை விரைவாக தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்படுகிறது.  10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை தேர்வு துறை சார்பில் இன்று வெளியாகிறது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடுகிறார்.