லாரி மோதி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!!

 
TN

சென்னை மதுரவாயலில் ஏற்பட்ட விபத்தில், 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார்.  தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்ட்டை பார்க்கும் முன்பே பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.  

accident

மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார் மாணவன் ஜீவா. மதுரவாயில் பாலத்தின் கீழே இன்று காலை இரு சக்கர வாகனத்தில் வந்த போது, லாரி மோதி உயிரிழந்தார்.

death

லாரியை ஓட்டி வந்த டிரைவர், சாலையிலேயே வண்டியை நிறுத்தி விட்டு தலைமறைவான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.