10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!!

 
tn

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

school

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.  தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். 

school

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ல் தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை  நடைபெற்றது.  12,616 பள்ளிகளில் சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எதிர்கொண்டனர். 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.