"நான் தான் ஏத்தனும் நீங்க ஏன் ஏத்த போறீங்க"... மெழுகுவரத்தியை தட்டிவிட்ட த.வெ.க எம்.எல்.ஏ இடையே மோதல்

 
ழ்

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முன்னிலையில் தவெஜ எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ஆகியோருக்கு இடையே வெளிப்படையாக மோதல் ஏற்பட்டது.

திருச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் (ICDS) துறை சார்பில் வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமை தாங்கினார். விழாவின் தொடக்கமாக குத்துவிழக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. யார் முதலில் குத்துவிளக்கை ஏற்றுவது என்பது தொடர்பாக தவெகவின் திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. விஜியும், காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் மெழுகுவரத்தி ஏற்ற முயன்றார். அதற்கு த.வெ.க எம்.எல்.ஏ எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தியை கேட்டார். 'முறையான நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை' என்று அதிருப்தி அடைந்த தவெக எம்.எல்.ஏ., காங்கிரஸ் எம்.பி.யின் கையிலிருந்த மெழுகுவர்த்தியைத் தட்டிவிட்டார். இதனால் மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. அமைச்சர் ரமேஷ் அவரைச் சமாதானப்படுத்த முயன்றார்.