#BREAKING ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளிடையே சிறையில் மோதல்! வெளியான பகீர் பின்னணி

 
ச் ச்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள் இடையே மோதல் ஏற்பட்டது. 

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்  ( மறைந்த )பிரபல தாதா நாகேந்திரன், இவரது மகன் அசுவத்தாமன், மற்றொரு தாதா (மறைந்த) ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். வேலூர் சிறையில் இருந்தபடி கொலைக்கு மூளையாக செயல்பட்ட நாகேந்திரன், உடல் நலக்குறைவால்  உயிரிழந்தார்.

புழல் சிறையில் இருந்தவர்களில் அசுவத்தாமன் உள்பட்12 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தனர். பொன்னை பாலு, அவரது மைத்துனர் மணிவண்ணன், வெடிகுண்டு  சப்ளையர் என கூறப்படும் ரவுடி சென்னை அசோக் நகர் புதூர் அப்பு உள்ளிட்டோர் ஜாமீன் கிடைக்காமல் புழல் சிறை உயர் பாதுகாப்பு பிரிவிலேயே  உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மற்றவர்களை ஜாமீனில் எடுப்பது தொடர்பான விவகாரத்தில் பொன்னை பாலு, அவரது மைத்துனர் மணிவண்ணன் ஆகியோர் ஒரு தரப்பாகவும், வெடிகுண்டு சப்ளையர் அசோக் நகர் புதூர் அப்பு தலைமையில் ஒரு தரப்பாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இரு தரப்பினரும் கைகளால் தாக்கி கொண்டனர்.அங்கு பணியில் இருந்த  உதவி சிறை அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் சிறை காவலர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது  உதவி சிறை அலுவலர் திருநாவுக்கரசை தள்ளி விட்டதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரிடமும் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைகாவலர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டுகள் சப்ளை செய்த அப்புவுக்கு பேசியபடி பணம் கொடுக்க வில்லையாம். இது தவிர ஜாமீன் எடுக்கவும் ஆற்காடு சுரேஷ் தரப்பு உதவவில்லை என கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக தான் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவுக்கும் - அப்புவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.