பள்ளியில் மாணவர்களிடையே மோதல்- ஒருவர் பலி! நாமக்கல்லில் பரபரப்பு
Aug 23, 2024, 20:25 IST1724424945478

நாமக்கல்லில் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த வரகூர் அரசுப் பள்ளியில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 11ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மோதலில் உயிரிழந்தவர் ஆகாஷ் (16) என்படும், அவர் நவலடிபட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அண்மை காலமாக அரசுப் பள்ளிகளில் மாணாவர்களிடையே மோதல் ஏற்படுவது அதிகரித்துவருகிறது. சாதிய ரீதியிலான மோதல், போதைப் பொருள் பழக்கம் ஆகியவை அதிகரித்துள்ளது.