பேருந்தில் ரத்தம் சொட்ட சொட்ட சண்டையிட்ட பயணிகள்! சென்னையில் பரபரப்பு

 
bus

சென்னை மாநகர பேருந்தில் 2 பயணிகள் இடையே ஏற்பட்ட மோதலால் சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் 17D மாநகரப் பேருந்தில் பயணிகள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கூட்ட நெரிசல் காரணமாக இருக்கையில் அமர்வது தொடர்பாக 2 பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் இரு பயணிகள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். ஒருவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிக் கொண்ட பயணிகளால் பரபரப்பு நிலவியது. 


பேருந்தை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நிறுத்திய ஓட்டுநர் போலீசில் புகார் அளித்தார். சென்னை பிராட்வேயில் இருந்து கலைஞர் நகர் செல்லக் கூடிய 17D பேருந்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 2 பயணிகள் இடையே ஏற்பட்ட தகராறால் பேருந்து 45 நிமிடம் தாமதமானதால் சக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.