காஞ்சிபுரம் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மோதல்

 
tn

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.இக்கோயிலில் பாஞ்சராத்திரம் ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

tn

இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.பழைய சீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது திடீரென கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

NN

வடகலை - தென்கலை பிரிவினர் இடையே பிரபந்தம் பாடுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .