அமைச்சர் சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் இடையே மோதல்
Updated: Apr 23, 2026, 18:45 IST1776950140803
அமைச்சர் சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

DMK Ex-Minister SekarBabu is Fighting with Our TVK Harbour Candidate P.S. Ashok 😡😡 pic.twitter.com/I1rvNeKfme
— Vijay Fans Trends (@VijayFansTrends) April 23, 2026
துறைமுகம் தொகுதியில் கடைசி நேரத்தில் சேகர்பாபு தவெக வேட்பாளர் சினோரா அசோக் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு வாக்குச்சாவடியை திமுகவினர் அபகரிக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. அப்போது அங்கு வந்த சினோரா அசோக் - சேகர்பாபு நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். துறைமுகம் தொகுதியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், நிகழ்விடத்துக்கு சென்ற சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவருகின்றனர்.

