டெல்லியில் CJP போராட்டம் அறிவிப்பு.. 57 மெட்ரோ நிலையங்களை மூட முடிவு..!

 
1

SIR-க்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும், டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை (அக்.10) கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தவுள்ளது.

இதன் காரணமாக டெல்லியில் 57 மெட்ரோ நிலையங்களும் இன்று (அக்.9) இரவு 9 மணி முதல் மூடப்படும் எனக் கூறப்படுகிறது. முழுமையாக மூடப்படாமல் அவற்றின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடவும், ரயில் சேவை இடைவெளியைக் குறைக்கவும் டெல்லி காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அக்டோபர் 8-ம் தேதி டெல்லி போலீசார் அனுப்பிய கடிதத்தில், இன்று (அக்டோபர் 9) இரவு 9 மணி முதல் 57 மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடுவது குறித்து பரிசீலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நிலையங்களில் மெட்ரோ ரெயில்களின் சேவை இடைவெளியையும் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நிலைமை சீராகும் வரை, அக்டோபர் 10-ம் தேதியும் இந்தக் கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டியிருக்கலாம் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கட்டுபாடுகளின் படி ,ராஜீவ் சவுக், சென்ட்ரல் செக்ரடேரியட், புதுடெல்லி, படேல் சவுக், ஜன்பத், மண்டி ஹவுஸ், ஐ.டி.ஓ., சுப்ரீம் கோர்ட், இந்திரபிரஸ்தா, காஷ்மீரி கேட், கரோல் பாக், ஹவுஸ் காஸ், லஜ்பத் நகர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஷாதரா, உள்ளிட்ட 57 நிலையங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த நடவடிக்கைகள் டெல்லியின் மத்திய, வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள பல மெட்ரோ நிலையங்களை உள்ளடக்கியுள்ளன.இரண்டு மெட்ரோ வழித்தடங்களிலும் உள்ள ஐஎன்ஏ நிலையமும் சேர்க்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின்போது அதிக அளவில் மக்கள் கூட வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தப் பரிந்துரையை போலீசார் முன்வைத்துள்ளனர். இருப்பினும், 57 நிலையங்களிலும் வாயில்களை மூடுவது மற்றும் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்வது தொடர்பான இறுதி முடிவை டெல்லி மெட்ரோ நிர்வாகமே எடுக்க வேண்டும்.

எனவே, டெல்லியில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள், பயணத்திற்கு முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்த்துக்கொள்வது அவசியம்.