சென்னையில் நாளை மாநகரப் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும்
சென்னையில் நாளை மாநகரப் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இது புதுச்சேரி தென்கிழக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. நாளை காரைக்காலுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே புதுச்சேரி ஆகிய புயலாக கரையை கடக்கக்கூடும். அடுத்த வரும் 3 தினங்களுக்கு தமிழக புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்ய கூடும். அதேபோல் ஒரு சில இடங்களில் கன மழை முதல் அதிக கன மழை வரை பெய்யும் கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை மாநகரப் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்றும், மழையைப் பொறுத்து தேவை ஏற்பட்டால் மட்டும் சேவையில் மாற்றம் இருக்கும் எனவும் மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகின்றனர்.