#BREAKING சினிமா டிக்கெட் விலையை உயர்த்த திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

 
பிகில் திரைப்படத்தை திரையிடவில்லை: பிரபல திரையரங்கம் அறிவிப்பு!

ஒரு டிக்கெட்டுக்கான திரையரங்கு பராமரிப்புக் கட்டணத்தை (TMC) ₹6-லிருந்து ₹10-ஆக உயர்த்த வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரையரங்கு டிக்கெட் விலையை ₹150-லிருந்து ₹250-ஆக உயர்த்த வேண்டும், ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் டிக்கெட் விலையை தானாகவே 10% உயர்த்த அனுமதிக்க வேண்டும் ஒரு டிக்கெட்டுக்கான திரையரங்கு பராமரிப்புக் கட்டணத்தை (TMC) ₹6-லிருந்து ₹10-ஆக உயர்த்த வேண்டும் என முதல்வர் விஜய்க்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்ற தற்போதைய உச்சவரம்பை தக்கவைத்துக் கொண்டு, அனுமதிக்கப்பட்ட திரையரங்கு இயக்க நேரங்களை காலை 9 மணி முதல் அதிகாலை 2 மணி என்பதிலிருந்து காலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி என மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.