#BREAKING தேவாலய மேல்தளம் இடிந்து விபத்து - இருவர் பலி
Updated: Sep 10, 2026, 21:24 IST1789055694025
தமிழ்நாடு- ஆந்திரா எல்லையில் தேவாலய கட்டுமான பணியின்போது மேல் தளம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
வேலூர் காட்பாடியில் மந்திகிருஷ்ணாபுரத்தில் தேவாலயத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், மேல்தள கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட சாரம் சரிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோரில் 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

