சரவணா ஸ்டோர்ஸை தொடர்ந்து மூடப்பட்ட போத்தீஸ்... ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா..

 
போத்தீஸ் - குரோம்பேட்டை


சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ்  கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து  சரவணா ஸ்டோர்ஸை தொடர்ந்து, போத்தீஸ் துணிக்கடையும் இழுத்து மூடப்பட்டுள்ளது.

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ்
குரோம்பேட்டையில் இயங்கிவரும்  'சரவணா ஸ்டோர்ஸ்'  கடையில் பணியாற்றும் 30 ஊழியர்களுக்கு நேற்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பல்பொருள் அங்காடியான சரவணா ஸ்டோர்ஸில் 500 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.. தாம்பரம்  மாநகராட்சி சார்பில் முதல்கட்டமாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் 250 பேருக்கு பரிசோதனை செய்ததில் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சரவணா ஸ்டோர்ஸ் காடை நேற்று மூடப்பட்டது.

போத்தீஸ்

இந்நிலையில் இன்று  குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்  தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  அங்கு பணிபுரியும் ஊழியர்கள் 240 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் வேலை பார்க்கும் 13 ஊழியர்களுக்கு  கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போத்தீஸ் கடையும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி மூடப்பட்டுள்ளது.