“சூர்யா என்னோட Inspiration”- சிரஞ்சீவி

 
s

நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் முயற்சிகள் தனக்கு உத்வேகம் கொடுப்பதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, “எதிர்காலத்தில் ஏழை மக்களுக்கு இலவசக் கல்வி வழங்க விரும்புகிறேன். ஒரு குடும்பத்தில் ஒருவர் கல்வி கற்றால், அந்த குடும்பம் முழுவதுமே ஒரு நல்ல நிலையில் இருக்கும். இந்த எண்ணத்திற்கு காரணம் நடிகர் சூர்யா. அவர் பல சந்தர்ப்பங்களில் அகரம் என்ற அமைப்பை சிரஞ்சீவி தான் காரணமும் உத்வேகமுமென கூறி இருக்கிறார். கல்விக்காக அவர் செய்யும் நலப்பணிகள் எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றன. நான் அவரிடம், ‘ஒரு காலத்தில் நான் உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தேன். இப்போது நீங்கள் எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆகிவிட்டீர்கள்’ என கூறுவேன். 


யுகாதி பண்டிகையை முன்னிட்டு புதிய அறக்கட்டளையை தொடங்க இருக்கிறேன். நடிகர் சூர்யாவை போல இலவச கல்வியை வழங்க விரும்புகிறேன். மக்கள் என்னிடம் காட்டும் அன்பே எனது மிகப்பெரிய பலம். அந்த அன்புக்கு சமூக சேவைகள் மூலம் உதவ வேண்டும் என்ற எண்ணமே என்னை முன்னேற்றுகிறது. “கல்வி கிடைத்தால் வாழ்க்கையே மாறும்”,  அதனால் ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவது தான் என்னுடைய அடுத்த முக்கிய இலக்கு. நடிகர் சூர்யா தொடங்கிய அகரம் அறக்கட்டளை மூலம் நடைபெறும் கல்வி சேவைகள்தான், என்னையும் சமூக சேவைகளில் மேலும் ஈடுபட தூண்டியது. மற்ற மாநிலங்களிலும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளேன்” என்றார்.