குழந்தைகள் தினத்தையொட்டி அண்ணாமலை, தினகரன் வாழ்த்து!!

 
tn

குழந்தைகள் தினத்தையொட்டி அண்ணாமலை, தினகரன் வாழ்த்து கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும்,  இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

tn

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான நல்வாழ்க்கையை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை. ஒவ்வொருவருக்கும் சிறந்த கல்வியையும், வாய்ப்புக்களையும் வழங்க உறுதியேற்போம். என்று குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என பறைசாற்றி, அதற்கான செயல்திட்டங்களையும் வகுத்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.

tn

குழந்தைகளிடம் அன்புசெலுத்தி அரவணைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கல்வி, முன்னேற்றம், பாதுகாப்பு, ஆகியவற்றையும் மேம்படுத்தி வருங்கால சமுதாயத்தின் சிற்பிகளாக குழந்தைகளை உருவாக்குவதற்கான உறுதிமொழியை அனைவரும் இந்நாளில் ஏற்போம். என்று குறிப்பிட்டுள்ளார்.