குழந்தையின் முகத்தை சாக்குபையால் மூடி சித்ரவதை- பதைபதைக்க வைக்கும் வீடியோ

 
ச்

அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சித்திரவதை செய்த அங்கன்வாடி ஊழியர் சஸ்பெண்ட் மற்றும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் - பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தையின் முகத்தை ஊழியர் கலைச்செல்வி சாக்குப்பையால் மூடி கொடுமைப்படுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வென்னிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுற்றுப்புறத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள், தங்களது குழந்தைகளை அடிப்படை கல்வி கற்க அனுப்பி வைக்கின்றனர். இந்த அங்கன்வாடி மையம் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டது. 


முதல் நாளான நேற்று அங்கன்வாடிக்கு வந்த குழந்தைகள் இடைவிடாமல் அழுதபடி இருந்துள்ளன. அப்போது, ஆத்திரத்தில் அங்கன்வாடி ஊழியர், குழந்தையை மிரட்டி, சாக்குப்பையால் முகத்தை மூடியுள்ளார். இதனால் குழந்தை அலறியது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலிஸார், அங்கன்வாடி ஊழியரான கலைச்செல்வியை கைது செய்த நிலையில், கலைச்செல்வியை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.