ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் வாளியில் மூழ்கி உயிரிழப்பு

 
baby leg

மேலூர் அருகே வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் வாளியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

bABY


மதுரை மாவட்டம் மேலூர் அருகே பட்டூரை சேர்ந்தவர் மீனா. இவரது கணவர் கல்லாணை கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இவர்களுக்கு சஸ்மிதா(4), கனிகாஸ்ரீ (1.5) உள்ளனர். மீனா இரு குழந்தைகளுடன் தாய் வீடான பட்டூரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் 3 குழந்தைகளுடன் கனிகாஸ்ரீ வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள தண்ணீர் வாளிக்குள் கனிகாஸ்ரீ தவறிவிழுந்து துடித்துள்ளார். பின் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேலவளவு போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வழக்குபதிவு செய்து குழந்தை இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.