தொண்டையில் மாத்திரை சிக்கி குழந்தை பலி

 
ச்

திருத்தணி அருகே பி.ஆர்.பள்ளி கிராமத்தில் தொண்டையில் மாத்திரை சிக்கி நான்கரை வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த நெசவு தொழிலாளியான வேலு மற்றும் சசிகலாவின் நான்கரை வயது மகன், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார். சிறுவனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆகவே அவரது தாயார் நேற்று இரவு பாதி மாத்திரை கொடுத்துள்ளார். உடைத்து கொடுக்கப்பட்ட பாதி மாத்திரை சுவாச குழாயில் சிக்கிய நிலையில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த குழந்தையின் உடலை அரசு மருத்துவமனையில் பார்த்த பெற்றோர், கதறி அழுதனர்.