தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து அலறிய குழந்தை! பரிதாபமாக பறிபோன உயிர்!!

 
baby leg

மீஞ்சூர் அருகே வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அலட்சியத்தால் தொடரும் உயிர்பலி : தண்ணீர் தொட்டியில் விழுந்து 10 மாத குழந்தை உயிரிழப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியை சேர்ந்த வசந்த் - வள்ளி தம்பதியரின் 2 வயது குழந்தை கீர்த்தனா. நேற்று மாலை 2 வயது குழந்தை கீர்த்தனா வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து அலறியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தையை மீட்டு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r

இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனை சவ கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 2வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது