தேர் சக்கரம் ஏறி குழந்தை உயிரிழப்பு.. திருவிழாவில் பரபரப்பு !

 
Kerela child

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கரா தேவி கோயிலில் ஆண்டுதோறும் சமய விளக்கு திருவிழா விமர்சையாக நடைபெறும்.

இத்திருவிழாவில் பெண்களை போன்று வேடமிட்டு ஆண்கள்,விளக்குகள் ஏந்தி அம்மனை வழிபடுவர்.

இதனால் இந்த திருவிழாவில் திருநங்கைகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அம்மனை வழிபடுகின்றனர்.

இவ்வருடம் நடைபெற்ற திருவிழாவில் நேற்றைய இரவு ரமேஷ் -ஜிஜி தம்பதியினர் தங்கள் ஐந்து வயது மகள் ஷேத்ராவுடன் கலந்து கொண்டனர். கட்டுக்கடங்காத கூட்டத்தினால் ஏற்பட்ட நெரிசலில் தனது தந்தையின் கையில் இருந்த ஷேத்ரா தவறி கீழே விழுந்தார். அச்சமயம் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த தேர் குழந்தையின் மீது ஏறி இறங்கியது.

இதில் படுகாயம் அடைந்த குழந்தையை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து சவாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.