‘முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்’ நாளை தொடக்கம்

 
mks

முன்னாள் படைவீரர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


தாய்நாட்டிற்காகத் தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும். வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதன்படி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்காக ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தினை நாளை ( ஆக 19)  முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும். 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இதன்படி,  முன்னாள் படைவீரர்கள் மாவட்டக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, இந்தப் படைவீரர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 848 அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இதில் 348  விண்ணப்பங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு அனைவருக்கும் தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதன்படி, தொழில்முனைவோர் பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மானியம் அரசால் வழங்கப்படவுள்ளது.