முதலீட்டாளர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

 
tn

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு வருகை தந்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் கடந்த 29ஆம் தேதி  தொழில் முதலீட்டு மாநாட்டில் கலந்துரையாடினார்.

tn

அதன் தொடர்ச்சியாக, ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர்  தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திட வலியுறுத்தினார்.ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் Mr. Rafael Mateo அவர்களும், Mr. Manuel Manjón Vilda, CEO Water Division அவர்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து பேசினார்கள்

tn

இந்நிலையில் ஸ்பெயினில் முதலீட்டாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.05) ஆலோசனை மேற்கொள்கிறார்.  Ampo valves, Ingeteam, Gorlan உள்ளிட்ட நிறுவனங்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.