"தண்ணீர் பிரச்சனையில் கவனம்"- முதல்வர் விஜய்யின் நாளைய பிளான்

 
விஜய்

நாளை தமிழக முதல்வர் விஜய் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். (21.10.2026) சென்னையில் மெரினாவில் ஒரு நிகழ்ச்சியும் மற்றும் சேப்பாக்கத்தில் அமைந்துள்ள 'TWAD வாரியத் தலைமை அலுவலகத்தில்'  நடைபெறும்  மற்றொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருக்கிறார்

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், பெய்யும் ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழக அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் TWAD வாரியம் சார்பில், பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்த, சுமார் 800 சதுர அடியில் ஒரு முன்மாதிரி வீடு (Model House) கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டை முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

இந்த மாதிரி இல்லத்தை பார்வையிட்ட பிறகு, முதலமைச்சர் ஜோசப் விஜய், "ஒவ்வொரு துளி நீரும் - நம் எதிர்காலம்" என்ற தலைப்பில் மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் கட்டாய மழைநீர் சேகரிப்பு அமைக்கப்படும், புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு அமைத்தால் சிறப்பு மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. TWAD வாரியம் மூலம் பொதுமக்களுக்கு இலவச ஆலோசனை வழங்கும் திட்டமும் உள்ளது. வழக்கமாக சினிமா, அரசியல் என பரபரப்பாக இருக்கும் தளபதி விஜய், தற்போது முதலமைச்சராக மக்கள் பிரச்சனையான தண்ணீர் பிரச்சனையில் கவனம் செலுத்தியிருப்பது, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.