முதல்வர் விஜய்யின் மாஸ் ஆக்ஷன்...தமிழகத்தில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் விவரங்கள் வெளியீடு..!
தமிழகத்தில் மதவழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டு இருந்தார்.
பொதுமக்களின் வேண்டுகோள் மற்றும் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் எந்த பகுதிகளில் எங்கெங்கு உள்ள கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன என்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
இந்த பட்டியலில் 717 மதுக்கடைகள் எண்களுடன் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டம்வாரியாக எத்தனை கடைகள் மூடப்பட்டு உள்ளன என்ற எண்ணிக்கையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதன் விவரம் வருமாறு;
சென்னை வடக்கு - 13
சென்னை மத்தி - 9
சென்னை தெற்கு -9
காஞ்சிபுரம் வடக்கு-10
காஞ்சிபுரம் தெற்கு -8
திருவள்ளூர் கிழக்கு -27
கோவை வடக்கு-48
கோவை தெற்கு-23
கரூர் - 8
ஈரோடு - 42
திருப்பூர் - 31
நீலகிரி - 27
அரக்கோணம் - 7
தர்மபுரி - 7
கிருஷ்ணகிரி-7
நாமக்கல் - 14
சேலம் - 22
திருவண்ணாமலை - 19
வேலூர் - 6
கடலூர் - 21
நாகை - 4
புதுக்கோட்டை-17
பெரம்பலூர் - 6
தஞ்சை-6
திருச்சி-15
திருவாரூர்-6
விழுப்புரம் - 9
திண்டுக்கல்-26
கன்னியாகுமரி-15
ராமநாதபுரம்-29
தேனி-12
திருநெல்வேலி-33
தூத்துக்குடி-63
மதுரை தெற்கு-39
மதுரை வடக்கு - 13
விருதுநகர் - 42
சிவகங்கை - 18
இதில் அதிகளவாக தூத்துக்குடியில் 63 கடைகளும், குறைந்த அளவாக நாகையில் 4 கடைகளும் மூடப்பட்டு உள்ளன.

