#BREAKING தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் கடிதம்!

 
கோயில் சொத்துகள் மீட்பு - முதல்வர் விஜய் ஆலோசனை

மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் 3 மீன்பிடி விசைப் படகுகளை மீட்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி,  ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு,  தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்  கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள், செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பயன்படுத்திய மூன்று மீன்பிடி விசைப்படகுகளுடன், மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் 13.10.2026 அன்று அதிகாலையில் கைது இவ்விவகாரத்தில் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தலையிட்டு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக மாலத்தீவு அரசுடன் தூதரகத்தின் வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், அவர்களது மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக மீட்பதற்கும், மீனவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள், இவ்விவகாரத்தில் தலையிட்டு, தக்க நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்திற்கும் மிகுந்த நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.