"யாரும் வீட்டுக்கு போக கூடாது"- எம். எல். ஏக்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
முதல்வர் விஜய் உடனான ஆலோசனைக்குப்பின் தவெக MLAக்களை நட்சத்திர விடுதியிலேயே இரவு தங்க வைக்க தலைமை திட்டமிட்டுள்ளது.
முதல்வர் விஜய் உடனான ஆலோசனைக்குப்பின் தவெக MLAக்களை நட்சத்திர விடுதியிலேயே இரவு தங்க வைக்க தலைமை திட்டமிட்டுள்ளது. கூட்டம் முடிந்த பிறகு வீட்டிற்கு செல்லக் கூடாது இங்கேயே தங்க வேண்டும் என தலைமை உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் நடைபெறும் நட்சத்திர விடுதியை தவெக தலைமை 3 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தவெக ஆட்சி அமைந்து 6 மாதம் நிறைவடைந்த நிலையில் அரசு மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வாய்ப்புள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்க தவெக MLAக்களிடம் பேரம் பேசப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை நடத்திவருகிறார். தவெக எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளதால் தங்க வைத்து அறிவுரை வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

