மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு
Oct 4, 2026, 15:19 IST1791107356725
தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் ரோஷோ நடத்தினார்.

தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் ரோஷோ நடத்தினார். சாலையின் இரு மருங்கிலும் திரண்ட பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மாருதி நகர் முதல் மூலனூர் வரை சுமார் 30கிலோமீட்டர் தூரம் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார்.
ரோடு ஷோவுக்கு நடுவே முதலமைச்சர் விஜய் மூலனூர் வஞ்சியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அவருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. முதலமைச்சர் விஜய்,தவெக வேட்பாளர் சத்தியபாமா, அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் வஞ்சியம்மனை வழிபட்டனர்.

