ரூ.15,300 கோடி முதலீடுகளுடன் இன்று சென்னை திரும்புகிறார் முதல்வர் விஜய்..!
முதலமைச்சர் விஜய், லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப்.17) காலை 8 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
லண்டனில் நடைபெற்ற சந்திப்புகள் மற்றும் முதலீட்டாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2036- ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே அரசின் இலக்கு என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்த இலக்கை அடையும் நோக்கில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசுப் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில், 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கடந்த செப்.10- ஆம் தேதி லண்டன் பயணம் மேற்கொண்டிருந்தார். முதலமைச்சரான பின்னர், விஜய் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். அரசுமுறைச் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர் ஸ்டோன் ஓடுதளத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உலகப்புகழ் பெற்ற லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார். இந்த கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது அணியினர் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

அதைத் தொடர்ந்து, செப்.14- ஆம் தேதி லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி நிறுவனத்திற்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்கியுள்ளது.
வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், நோக்கக் கடிதமும் சேர்த்து ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்டிருப்பதோடு, 10,000- க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நாளை (செப்.17) சென்னை திரும்புகிறார். அதன்பிறகு, முதலமைச்சரின் லண்டன் பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கையை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, செப்.14- ஆம் தேதி லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி நிறுவனத்திற்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்கியுள்ளது.
வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், நோக்கக் கடிதமும் சேர்த்து ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்டிருப்பதோடு, 10,000- க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (செப்.17) சென்னை திரும்புகிறார். அதன்பிறகு, முதலமைச்சரின் லண்டன் பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கையை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.