நாளை மறுநாள் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்..!!
முதல்வர் விஜய், நவ.16ம் தேதி டில்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி சந்திக்க திட்டமிட்டு உள்ளார். அவரிடம் மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் பிடிவாத்தையும், தமிழக விவசாயிகளுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் முதல்வர் விஜய் விளக்கி கூற உள்ளார்.
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முனைப்புடன் இருக்கிறது. அவ்வப்போது நிருபர்களை சந்திக்கும் முதல்வர் சிவகுமார், மேகதாது அணை விவகாரத்தை குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தரவே இந்த அணையை கட்டுகிறோம் என்பது அவர் வாதம்.அண்மையில் மைசூருவில் நடந்த அரசு விழா ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்த போது, அவர் முன்னிலையில் பேசிய சிவகுமார், யார் தடுத்தாலும் அணை கட்டப்படுவது உறுதி என்றார். அவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. தமிழக காங். தலைவர் மாணிக்கம் தாகூர், சிவகுமாருக்கு எதிர் நிலையில் இருந்து பேசி உள்ளார். பிடிவாதம் பிடிக்கிறார், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பெசுகிறார் என்று விமர்சித்து இருக்கிறார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு கடிதம் ஒன்றை திமுக தலைவர் ஸ்டாலின் எழுதி உள்ளார்.

