இந்த பாட்டி கண்ணாடிய போட்டுக்கோ..! விவசாயி வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் விஜய்

 
ச்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே விவசாயி ஒருவரின் வீட்டிற்கு திடீரென சென்று முதலமைச்சர் விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபின் புறப்பட்ட முதலமைச்சர், சின்னகாவூரில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கு சென்றார். அவரை மூதாட்டி ஒருவர் கையை பிடித்து அழைத்துச் சென்றார். அப்போது, தனது கூளிங் கிளாசை மூதாட்டிக்கு முதலமைச்சர் பரிசளித்தார். விவசாயி குடும்பத்தினருக்கு புதிய ஆடைகளை வழங்கி மகிழ்ச்சி கலந்துரையாடிய முதலமைச்சர் விஜய், அங்கிருந்த மக்களின் கோரிக்கைகளையும்  கேட்டறிந்தார்.