துபாய் வழியாக லண்டன் செல்லும் முதல்வர் விஜய்

 
vஇஜய்

முதல்வர் விஜய் நாளை இரவு 10 மணிக்கு துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு செல்கிறார்.

முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத் திட்டம் குறித்த தகவல்கள் 

                                   
முதலமைச்சர் விஜய் நாளை (செப்.10) இரவு 10 மணிக்கு லண்டன் புறப்படுகிறார். எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக லண்டன் செல்கிறார். முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் தொழிலதிபர்களை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. லண்டன் பயணத்தை முடித்து விட்டு 16ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சென்னை வந்தடைகிறார். லண்டனில் நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பார்க்க இருப்பதாகவும் அவருடன் பேச இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்களை சந்தித்து பேச உள்ளார்.