கூட்டணி கட்சி MLAக்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை
தவெக ஆதரவு, கூட்டணி கட்சிகளின் எம். எல். ஏகிகளை இன்று பிற்பகல் சந்தித்து உரையாட உள்ளார் முதலமைச்சர் விஜய். தவெக கூட்டணி காட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காத சிபிஎம், சிபிஐ காட்சிகள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
முதல்வர் ஜோசப் விஜய் தனது கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு சாதாரண சந்திப்பு இல்லை என்றும் அடுத்து வரும் சட்டசபை கூட்டத்தொடர் மற்றும் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களையும் ஒரே இடத்தில் அழைத்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்துவது இதுவே முதல் முறை என்பதால் இந்த கூட்டத்திற்கு அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

